தஞ்சாவூர் அருகே, மழை நீரில் நனைந்து முழுவதுமாக முளைக்கத் தொடங்கிய நெற்பயிரை, டிராக்டர் கொண்டு உழவு ஓட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆலங்குடியை சேர்ந்த விவசாயி சாமிநாதன், 2 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில், ஒரு ஏக்கரிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் அதனை டிராக்டர் கொண்டு அழித்தார். தஞ்சாவூர் மாவட்டம், ஆலங்குடி அருகே சாமிநாதன் என்ற விவசாயி, தமக்கு சொந்தமான நிலத்தில், இரண்டு ஏக்கரில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தொடர் கன மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இரண்டு ஏக்கரில், ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி, முளைக்க துவங்கியதால் விவசாயி சாமிநாதன், டிராக்டர் கொண்டு உழவு செய்து நெற்பயிர்களை அழித்தார்.