நெல்லையில் வீட்டில் தனியாக வசித்து வந்த துணை ஆட்சியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்த பழனியை சேர்ந்த பாஸ்கர்,பாளையங்கோட்டை அன்பு நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில், அவர் பணிக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், பாஸ்கரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட நிலையில், அவர் சடலாக கிடந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், பாஸ்கரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.