துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிஷர்ட் அணிந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது குறித்த எதிர்கட்சி தலைவரின் விமர்சனத்திற்கு கருத்து தெரிவிக்க முடியாது என்ற அமைச்சர் எ.வ.வேலு ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் என்றார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட வரும் மணிமண்டபத்தை அமைச்சர்கள் எ. வ.வேலு மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.