மதுரை மாவட்டம், மேலூர் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 20 ஆயிரம் பேருக்கு தடபுடலாக அசைவ விருந்து பரிமாறப்பட்டது. காஞ்சிவனம் சுவாமி கோயில் மந்தை திடலில் ஏற்பாடு செய்யபட்ட விருந்திற்காக சுமார் 3 ஆயிரம் கிலோ மட்டன், 25 ஆயிரம் சிக்கன் லெக் பீஸ் கொண்டு பிரியாணி அசைவ விருந்து சமைக்கும் பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்களில் பொது மக்கள் வரவழைக்கபட்டு விருந்து பரிமாறப்பட்டது.