அதிமுகவினர் ஒன்று சேர்ந்தால் திமுக உட்பட எந்த கட்சியும் தங்களை வெல்ல முடியாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மழைநீர் ஒரே நாளில் அகற்றப்பட்டதாக கூறப்பட்டதற்கு, துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தித் தாள்களை படிக்க வேண்டும் என கிண்டலாக பதிலளித்தார்.