கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.