”உடன் பிறப்பே வா...” என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் கட்சி பதவிகள் பறிக்கப்படும்"" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தினார். அப்போது, திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று, நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையும் பாருங்கள் - "பதவி பறிக்கப்படும்" முதல்வர் கடும் எச்சரிக்கை | MKStalin | OneToOneMeeting | DMKPolitics