ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தீவிரமாக கண்காணிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வேலூர் சிறைக் கைதி சிவகுமாரை, சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு பணம், நகையை திருடியதாக கூறி தாக்கியதாகவும் தொடரப்பட்ட மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், டிஐஜி ராஜலட்சுமிக்கு எதிரான விசாரணையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டதுடன், சிறை கைதிகள் இது போன்று பயன்படுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய சிறைத்துறை டிஜிபிக்கும் ஆணையிட்டனர்.