தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்த தாமதம் ஆனதால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என மாணவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். சங்கரன்கோவிலை சேர்ந்த வசந்த், ஆய்க்குடியில் உள்ள ஜே.பி.பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கட்டணம் செலுத்தவில்லை என கூறி மாணவனை கல்லூரி நிர்வாகம் வகுப்பிற்குள் அனுமதிக்காத நிலையில் 15 நாட்களுக்கு பின் கட்டணம் செலுத்தப்பட்ட போதும், போதிய வருகைபதிவு இல்லை என கூறி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.