சென்னை மாநகராட்சி பகுதிகளில் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சில நாட்களாக மழை பெய்வதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சோழிங்கநல்லூர், அடையாறு மண்டலங்களில் மட்டும் டெங்குவால் 170-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.