கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு விசிகவினர் மதுப்பாட்டில்களை கொட்டி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மதுவிலக்கினை அமல்படுத்த கோரியும், சமூகத்தை சீரழிக்கும் டாஸ்டாக் கடைகளை மூட கோரியும் 50க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.