நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில் ஒரு மாதத்திற்கு பின்னர் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் மாணவ,மாணவிகளை உற்சாக வரவேற்பு அளித்த பள்ளி நிர்வாகம் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டகை, சூரல்மலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு கிராமங்கள் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்தது.. நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. இந்நிலையில் வெள்ளார்மலை அரசு பள்ளி மற்றும் முண்டகை அரசு பள்ளி நிலச்சரிவில் உருக்குலைந்தது. இந்த பள்ளிகளில் படித்த சில மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். வெள்ளார்மலை பள்ளியில் படிக்கும் 546 மாணவ,மாணவிகள் ,மேப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியிலும், முண்டகை பள்ளியில் படிக்கும் 61 மாணவ,மாணவிகள் மேப்பாடி, ஏபிஜே ஹாலில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் இன்று பள்ளிகள் துவங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலுள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாது' என்பதை உறுதியளித்த பின்னர், மூன்று KSRTC பேருந்துகளில் முண்டகை, சூரல்மலையிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார் கல்வி அமைச்சர் சிவன்குட்டி அவர் முன்னிலையில் பள்ளி நுழைவு விழா நடைபெற்றது. புதிய நோட்டு மற்றும்,புத்தகம் மற்றும் தேவையான அனைத்து பொருட்கள் வழங்கப்பட்டது ஒரு பகுதியாக, பள்ளியில் பெரிய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகளின் மனதில் உள்ள சோகத்தை மாற்றவே கொண்டாட்டம். நிரந்தர வசதி விரைவில் தயார் செய்யப்படும். கவுன்சிலிங் உள்ளிட்ட பிரச்னைகளில் தலையிட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.