சென்னை மாநராட்சியில் நிறைவேற்றப்பட்ட சொத்துவரி உயர்வு, தனியார் மயானங்கள் உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இந்த தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.