பாட்டாளி மக்கள் கட்சி திடீர் ஆர்ப்பாட்டம் : விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இருந்து வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் இருந்து விளைந்த தானியங்கள் நெல்,மற்றும் மணிலா எள்ளு, கம்பு, கேழ்வரகு, உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகின்றனர். விவசாயிகள் கொண்டு கொண்டுவரும் தானியங்களுக்கு ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல் அவர்களை ஒருமையில் பேசுவதும் முறையாக பணம் வழங்காமலும் காலதாமதம் செய்து விவசாயிகளை அலைகழிப்பது அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறி இதனால் தொடர்ந்து விவசாயிகள் கடும் சிரமம் அடைவதாகவும். இதனால் அடிக்கடி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாலை மறியலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூட முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர் பால சக்தி தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அங்குள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றனர், பாட்டாளி மக்கள் கட்சி திடீர் ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டத்தால் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்ப பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். Related Link விமானம் தாங்கி கப்பலை நோக்கி வந்த ட்ரோன்