சென்னை மாநகராட்சியின் 14 மற்றும் 15ஆவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் குப்பை எடுப்பதற்கு அடாவடியாக குப்பை வரி செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் வற்புறுத்துவதாக கூறி OMR சாலையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதம் 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கேட்டு அராஜகம் செய்வதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.