பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூரில், அச்சங்கத்தின் சார்பில், 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.