SIR பணிகளில் ஆட்சி, அதிகாரத்தை திமுகவினர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு சென்னையில் நடக்கும் SIR பணிகளில் அதிகளவு குளறுபடி நடப்பதாக திமுக அரசை கண்டித்தும், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை மாநகர ஆணையரை கண்டித்தும் அதிமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒப்புக்காக எஸ்.ஐ.ஆரை எதிர்த்து, அதனை கள அளவில் திமுக செயல்படுத்தி இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார். இதையும் பாருங்கள் - வெடிக்கும் போராட்டம், திமுக ஒருபுறம், அதிமுக ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு | ADMK