மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும், மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பெயரை மாற்றக் கோரியும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்மா சமூக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஸ்வகர்மா சமுதாயத்தின் வரலாறு மற்றும் பெருமைகளை அறியாமல் மத்திய நிதி அமைச்சர் பேசியிருப்பதாகவும், தனது கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதில் விஸ்வகர்மா சமூக மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.