சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, உரிய முன்னறிவிப்பு இல்லாமல் இடிக்கப்பட்டதால் அதன் அருகேயுள்ள வீடுகள் சேதமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நுங்கம்பாக்கம் தெற்கு மாட வீதியில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மிகவும் சேதமடைந்ததால் இடிப்பதற்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடியிருப்பை இடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகேயுள்ள 4 வீடுகள் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக ஒரு வீட்டின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்து பீரோ, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.