ஆட்சிக்கு அறிவில்லையா வீட்டை இடிக்கிறீங்க கொடி கம்பம் இருக்கு இது முக்கியமா இப்போ-முன்னால் அதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு. குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முருகன் கோவில் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வீடுகள், கடைகள் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் பூகம்பம் வந்ததுபோல் காட்சி அளித்து வரும் நிலையில் வீடுகளை இழந்த பொதுமக்கள் வாடகை வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த பகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பழனி பார்வையிட்டு வீடுகளை இழந்த பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக வீடுகள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் திமுக கொடி கம்பம் அகற்றப்படாமல் இருந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அவர் அறிவு இல்லையா இந்த ஆட்சிக்கு குடியிருந்த வீட்டு இடிக்கிறாங்க இந்த கொடி கம்பத்தை இடிக்கல இது தேவையா இது ஆக்கிரமிப்புல இல்லையா அதிகாரிகள் பயப்படுறாங்களா என பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் வீடுகள் மற்றும் கடைகள் இழந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியரை சந்திக்க மக்களோடு சென்றார்.