டெல்லியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க கோரி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கததலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.