தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசு அறிவித்தபடி சிட்கோ தொழிற்பேட்டையை லிங்கம்பட்டியில் அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லிங்கம்பட்டிக்கும் - குலசேகரபுரத்திற்கும் இடையே சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வரும் நிலையில், இரு ஊராட்சியும் தொழிற்பேட்டை தங்களுக்கு என சொந்தம் கொண்டாடி வருகிறது.