தருமபுரி மாவட்டம், வெதரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மழை பெய்தால் உள்ளே நீர் கசியும் அளவுக்கு பாழடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடத்தை கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் கட்டடம் கட்டி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.