தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து இயங்க வலியுறுத்தி, விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், தனியார் சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகையிட்டனர்.