ஈரோடு மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதுமை காலனி வீடுகளை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என சாலையோர குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2016 ல் வீட்டு வசதி வாரியத்தால் மாநகராட்சி பகுதியில் புதுமை காலணி வீடுகள் கட்டப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக அவை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் உள்ள மின் வயர்கள், மீட்டர்கள் திருடுபோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதலமைடந்த கட்டடத்தை புனரமைத்து தர 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.