புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்கோரி மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பள்ளியில் சிதலமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதாக அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது.