திருப்பூர் மாவட்டம் பழங்கரை குளத்துப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மகாவிஷ்ணுவிற்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளையை நிரந்தரமாக மூடக்கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு பள்ளியில் மூடநம்பிக்கையை புகுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய மகாவிஷ்ணுவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , திராவிடர் விடுதலை கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.