தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், துப்புரவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.