கோயம்புத்தூரை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரை தொழில் போட்டி காரணமாக தாக்கிய ஊட்டியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி மேட்டுப்பாளையம் - ஊட்டி பிரதான சாலையில் கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் கோவை கால்டாக்ஸி ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சூலூரை சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் தங்கவேலு புதன்கிழமை காலை சவாரி ஏற்றி ஊட்டிக்கு சென்றபோது, சுற்றுலா வாகன டிரைவர் அசோசியேஷன் சங்க தலைவராக உள்ள தீபக் என்பவர், வெளியூர் ஓட்டுநர்களால் தங்களது தொழில் பாதிப்பதாக தகாத வார்த்தை பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தங்கவேலு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடவடிக்கை கோரி நடைபெற்ற போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.