சென்னையில் சாலையோர கடைகள் நடத்த அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகள் தனித்தனியாக வரையறை செய்யப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சாலையோர கடைகள் அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை வரையறுக்கும் பணியில் நகர விற்பனைக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அறிவிப்பு பலகைகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.