நாமக்கல்லில், இன்று காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய, தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி அளித்திருந்த நிலையில், 11 மணி வரை பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு விஜய் வரவில்லை.. சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய், இன்று நாமக்கல், கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலையில் நாமக்கல், பிற்பகலில் கரூரிலும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில், நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்சாரம் நடைபெறும் பகுதிக்கு காலை 11 மணி வரை விஜய் வரவில்லை. விஜய் சாலை மார்க்கமாக வருவதில் தாமதம் ஏற்பட்டது. வழி நெடுகிலும் திரண்ட மக்கள் கூட்டத்தால் விஜய் வாகனம் ஊர்ந்து சென்றது.விஜய்யை பார்க்க பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் வந்துள்ளதால், கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பிரச்சாரத்தை ஒட்டி ஆம்புலன்ஸ் வசதியும், போலீசார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் விஜய் பேச தொடங்காத நிலையில், அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள், குமாரபாளையம் கிட்னி திருட்டு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.