வேலூர் மாவட்டம் செங்குன்றம் வனப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன. செங்குன்றத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பூமியில் புதைத்து வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரிடம் 15 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் சென்னையிலிருந்து நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன. 5 அடி பள்ளம் தோண்டப்பட்டு பேட்டரி கனெக்சன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்தனர்.