பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் பகுதியில் சிதிலமடைந்து அபாய நிலையில் காணப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது. ஆலம்பாடி பகுதியில் இருந்து கிணற்று தண்ணீரை ஏற்றி நகர்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க பெரம்பலூர் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இல்லாமல் போனது.