நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமான பணியின் குறைபாடுகள் குறித்து கட்டுமான ஊழியர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கடிந்து கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் கட்டுமான பணிகள் சரியில்லை என்றும் மீண்டும் அதனை சீரமைக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு ஈஸ்வரன் உத்தரவிட்டார்.