மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். தூத்துக்குடியில், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதிஸ்டாலின், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 9 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.