நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் பழுதான மேல்நிலை நீர் தேக்க தொட்டி அகற்றபட்டது. புளியமரத் தெரு பகுதியில் 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்துவந்த நீர் தேக்க தொட்டி சேதமடைந்து கீழே விழும் நிலையில் இருந்ததாக, நியூஸ்தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.