மதுபான பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதாக கூறி, பெண் ஒருவர், தனது மூன்று மகள்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலவாஞ்சூர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த இராஜேஸ்வரி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தன்னையும், தனது குடும்பத்தையும் அவதூறதாக பேசுவதாக போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது, இது குறித்து உரிய நடவடிக்கையில்லாததால் வேதனையடைந்த அவர், தனது மூன்று மகள்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் ஓடி வந்து வழுக்கி விழுந்த போதும், விடாமல் அவர்களை தடுத்து காப்பாற்றினார்