திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கான திருக்குடைகள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கயிலாய வாத்தியங்கள் மற்றும் சிவ கோஷம் முழங்க கரகாட்டம், பரதநாட்டியம் சகிதம் மாடவீதிகளில் வலம் வந்த திருக்குடைகள் அண்ணாமலையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.