மருத்துவகுணம் வாய்ந்த அவகோடா பழ விவசாயம் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே அவகோடா மரத்தில் மர்ம நோய் தாக்குவதால் ஒரு மரத்தில் டன் கணக்கில் விளையும் பழங்கள் தற்போது 10 கிலோ முதல் 50 கிலோ வரை மட்டுமே விளைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.