கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, தேசப்பிதா காந்தி சிலையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருதங்கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இரணியல் சர்வோதயா சங்கம் உள்ளது. இந்த சங்க வளாகத்தில் உள்ள காந்தி மண்டபத்தில், உட்கார்ந்த நிலையில் இருந்த காந்தியடிகள் சிலையின் தலைப்பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இரணியல் சர்வோதய சங்கம் பல்வேறு காரணங்களுக்காக மூடிக்கிடக்கும் நிலையில், அந்த வளாகத்தில் இருந்த காந்தி சிலையின் தலை துண்டிக்கப்பட்டிருப்பது காந்தியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.