கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்த பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த ஒன்பதாம் தேதி நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் கீழே இறங்கி கொண்டிருந்த போது, அதிகாலையில் கடும் குளிர் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.