புதுக்கோட்டையில் போதை ஊசி பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் காவல்நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி விஜயபாரதி நேரில் விசாரணை மேற்கொண்டார். 13 இளைஞர்களை போலீஸார் விசாரிப்பதற்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு விக்னேஸ்வரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.