விழுப்புரம்... பைபாஸ் சாலையோரத்தில் கிடந்த பெண் சடலம். செல்போன் எண்களை டிரேஸ் செய்த துப்பு துலக்கிய காவல்துறையினர். லாரி டிரைவர் ஒருவர் பெண்ணை அடித்துக் கொலை செய்து சாலையோரத்தில் வீசியது அம்பலம். 46 வயது பெண்ணை அடித்து கொன்றது ஏன்? கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் கொலையாளிக்கும் என்ன சம்மந்தம்? பின்னணி என்ன?புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்துல ஒரு பெண் சடலம் கெடந்துருக்கு. ரத்தம் உறைஞ்சு போய் கிடந்த சடலத்த பாத்து பதறுன மக்கள் சிலர், போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்காங்க. அதுக்குப்பிறகு, அங்க வந்த போலீசார் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சு, சாலையோரங்கள்ல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள செக் பண்ணிருக்காங்க. அதுல, புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸூக்கு வந்த ஒரு லாரியில இருந்து இறங்குன நபர், அங்க இங்கன்னு சுத்தி முத்தி பாத்துட்டு லாரிக்குள்ள இருந்து ஒரு பெண் சடலத்த சாலையோரத்துல போட்டுட்டு போன காட்சி பதிவாகிருந்துருக்கு.அந்த சிசிடிவி காட்சிய கைப்பற்றுன போலீஸ், அந்த நபர் யாருன்னு கண்டுபிடிக்குறதுக்காக, சிசிடிவி காட்சியை எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி புலன் விசாரணையில இறங்குனாங்க. அதுல, அந்த நபர் சென்னைய சேர்ந்த கண்ணன்-ங்குறதும், லாரி டிரைவர் வேலை பாத்துட்டு இருக்குறதும் தெரிஞ்சுருக்குது.சென்னை, ராயபுரத்த சேர்ந்தவர் 52 வயசான கண்ணன். 15 வருஷமா லாரி டிரைவர் வேலை பாத்துட்டு வர கண்ணனுக்கு ரெண்டு மகள் இருக்காங்க. இந்த தகவல் எல்லாம் தெரிஞ்சதும் சென்னைக்கு போய் விசாரிச்சிருக்காங்க போலீசார். வீட்டுல இருந்தவங்ககிட்ட கண்ணன பத்தி கேட்டப்ப, அவரு எங்க இருக்காருனு தெரியல. வழக்கமாவே எங்க போறேன், என்ன பண்றேனு எதுவுமே யார்ட்டயும் சொல்லமாட்டாருனு சொல்லிருக்காங்க உறவினர்கள். அடுத்து அவரோட செல்போன் எண்ணை வாங்கின போலீசார், அந்த எண்ணை டிரேஸ் பண்ணி வானூர்ல பதுங்கியிருந்த கண்ணன மடக்கி பிடிச்சு விசாரிச்சிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் பல உண்மைகள் வெளிய வந்துச்சு. மயிலாதுறைய சேர்ந்தவங்க 42 வயசான மகேஷ்வரி, இவங்களுக்கு கல்யாணமாகி 2 ரெண்டு மகள்கள், ஒரு மகன் இருக்காங்க. கடந்த 20 வருஷத்துக்கு முன்னாடி மகேஷ்வரியும், கண்ணனும் லவ் பண்ணிட்டு இருந்தப்ப, ரெண்டு பேரும் எல்லை மீறி பழகுனதுல, மகேஷ்வரி கர்ப்பம் ஆகிட்டாங்க. காதலி கர்ப்பமான விஷயம் தெரிஞ்சதும், கண்ணன் அவங்கள கழட்டி விட்டுட்டு சென்னைக்கு போய், வேற பெண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகிருக்காரு.மகேஷ்வரி, கண்ணன பல இடங்கள தேடி பாத்தும் கிடைக்காததால், சொந்தக்காரங்களாம் சேந்து மகேஷ்வரிய வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதுக்குப்பிறகு, இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்துட்டாங்க. கண்ணனுக்கு பிறந்த மகள் உட்பட மூணு பிள்ளைகளையும் கவனிச்சிட்டு வந்த மகேஷ்வரி, கடந்த சில மாசங்களுக்கு முன்னாடி வேலை விஷயமா சென்னைக்கு வந்துருக்காங்க. அப்படி வந்தப்ப, 20 வருஷத்துக்கு முன்னாடி காதலிச்சு ஏமாத்திட்டு போன கண்ணன தற்செயலா சந்திச்சிருக்காங்க. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் பாத்துக்கிட்டதால, மகேஷ்வரி சந்தோஷமாகிருக்காங்க. அதுக்குப்பிறகு, கண்ணன் கூடவே வாழ விரும்புன மகேஷ்வரிய, படாளம் பகுதில ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து ரெண்டு பேரும் கணவன் - மனைவி போல வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. பழைய காதலன பாத்ததும் ஊர்ல உள்ள குடும்பத்த விட்டுட்டு கண்ணன்கூட வாழ்ந்துட்டு இருந்த மகேஷ்வரி, அடிக்கடி கண்ணன்கிட்ட சண்ட போட்டுருக்காங்க.மூத்த மகளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிருக்காரு கண்ணன். இந்த விஷயம் தெரிஞ்சதும் ஆத்திரமடைஞ்ச மகேஷ்வரி, மூத்த மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற, அப்ப, நமக்கு பொறந்த பொண்ண பத்தி பேசக்கூட மாட்டிக்கிறன்னு சொல்லி, கண்ணன் கிட்ட சண்ட போட்டுருக்காங்க. அதனால, ரெண்டு பேத்துக்கும் இடையில அடிக்கடி தகராறு வந்துருக்குது. இந்த சூழல, மகேஷ்வரிக்கு நெறைய ஆண்களோட பழக்கம் இருக்குறதாவும், பணத்துக்காக மகேஷ்வரி தவறான செயல்கள செஞ்சிட்டு இருந்ததாவும் சொல்லப்படுது. மகேஷ்வரி பணத்துக்காக பல ஆண்களோட உறவுல இருக்குறத விஷயம் தெரிஞ்சதும் கண்ணன் சண்ட போட்டுருக்காரு. இது சம்பந்தமா ரெண்டு பேத்துக்கும் இடையில கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ருக்குது. அப்போ, மகேஷ்வரிய கீழ தள்ளி தலை பகுதியிலேயே சரமாரியா தாக்கிருக்காரு. அதுல, நிலைகுலைஞ்ச மகேஷ்வரி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க. அதுக்குப்பிறகு, இரவோடு இரவா மகேஷ்வரி சடலத்த நிர்வாணமா தன்னோட லாரில கொண்டு போன கண்ணன், திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையோரத்துல வீசிருக்கான். அடுத்து, மகேஷ்வரி போட்டுருந்த கம்மல், தாலி செயினையும் திருடிட்டு எஸ்கேப் ஆகிருக்கான். போலீசார் விசாரணையில கண்ணன் ஒன்னுவிடாம எல்லாத்தையும் சொன்னத வச்சு அவன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச காவலர்கள், கைது பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.