புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல்வேட்டைக்கு சென்ற இருவர், தைல மரக்காட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், அவரது உறவினர் முருகானந்தம் ஆகிய இருவரும் அங்குள்ள வயல்பகுதியில் முயல்வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.