காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நண்பர் வீட்டில் தங்கியிருந்த தவெகவின் நெல்லை மாவட்ட செயலாளர் மாரடைப்பால் உயிரிழந்தார். பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சாஜி என்கிற அந்தோணி சேவியர், பனையூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். அவரது மறைவுக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.