தமிழக வெற்றிக் கழகத்தினரால் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த அவலம் ஏற்பட்டது. செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளராக D.கில்லி சரத் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பனையூரில் இருந்து தாம்பரம் சென்ற அவருக்கு தவெகவினர் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.