செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் சிஃபி நிறுவன தரவு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவில் ஆயிரத்து 882 கோடி ரூபாய் முதலீட்டில் சிஃபி நிறுவனம் நேரடி தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரவு மையத்தால் ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் அந்நிறுவனம் சார்பில் அமைக்கப்பட உள்ள திறந்தவெளி கேபிள் லேண்டிங் நிலையத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.