கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட தாசில்தார் மற்றும் அவரது உதவியாளரை, பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த ரஞ்சித்குமாரிடம், தாசில்தார் ரமேஷ்குமார் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்த ரஞ்சித்குமார் அவர்களது அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தாசில்தாரின் உதவியாளர் சரவணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தாரையும், உதவியாளரையும் கைது செய்தனர்.