குலசேகரபட்டினத்தில், வெகு விமர்சையாக நடைபெற்ற தசரா திருவிழாவில், விண்ணை பிளந்த ’ஓம் காளி ஜெய் காளி’ கோஷத்தால், பக்தர்கள் பரவசமடைந்தனர். உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் தசரா திருவிழா செப்டம்பர் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், காளி வேடமிட்ட பக்தர்கள், கோயில் வளாகம் அருகே சென்றதும் ஆக்ரோஷமாக அருள் வந்து ஆடினர் . ’ஓம் காளி ஜெய் காளி’ கோஷமானது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.