வேலூர், ஸ்ரீபுரம் தங்ககோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். தங்கக் கோயில் பீடாதிபதி திரௌபதி முர்முவுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஆசி வழங்கினார். 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்வர்ண மகாலட்சுமியை தரிசித்த குடியரசுத் தலைவர், வைபவ லட்சுமிக்கு பூஜை செய்தார். பின்னர், கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்ட திரெளபதி முர்முவுடன் கோயில் நிர்வாகிகள் இணைந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.